Latest News
மீண்டும் ஒரு தேர் விபத்து ஒருவர் பலி- 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முக ஸ்டாலின்
இரு தினங்களுக்கு முன் தஞ்சை மாவட்டம் களிமேடு என்ற கிராமத்தில் அப்பர் ஸ்வாமிகளின் தேர் திருவிழாவில் தேர் ஒரு இடத்தில் திரும்பும்போது சக்கரம் மின் கம்பியில் உரசியதில் 11 பேர் பலியாகினர்.
இந்த விபத்து தமிழ்நாட்டை மட்டும் இன்றி இந்தியாவையே உலுக்கியது எனலாம் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இவ்விபத்துக்கு தங்கள் வருத்தங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்து நடந்து இரண்டு நாட்களுக்குள் நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் விழாவில் இதே போல் தேர்த்திருவிழாவில் கட்டை போடும் நபரான தீபன்ராஜ் என்பவர் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.
இவரது குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
