மாஸ்டர் வெளியானது- தன் டீமுடன் படம் பார்த்த லோகேஷ்

33

தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் இன்று காலை வெளியிடப்பட்டது. விஜய் ,விஜய் சேதுபதி,மாஸ்டர் மகேந்திரன், சாந்தனு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட ஆக்சன் படம்.

இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்தின் முதல் காட்சி இன்று காலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் வெளியானபோது படத்தில் இயக்குனர் லோகேஷ்,நடிகர் அர்ஜூன் தாஸ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

முதல் ஷோவில் கலந்து கொண்டு அனைவரும் என் ஜாய் செய்து படம் பார்த்தனர்.

பாருங்க:  வைரல் ஆகும் மாஸ்டர் புகைப்படம்