மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த ஐபிஎஸ்

23

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர் திரு. அரவிந்தன் ஐபிஎஸ். இவரது பணிக்காலத்தில் கொரோனா உட்பட பல விசயங்களுக்கு விரைந்து செயலாற்றியவர் மாவட்ட மக்களிடம் நன்மதிப்பை பெற்ற எஸ்.பி என இவரை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.

சென்ற வருடம் சென்னை கோயம்பேட்டுக்கு கொண்டு சென்ற காய்கறிகளை லாக் டவுனை காரணம் காட்டி அனுப்ப மறுத்த எஸ்.ஐ ஒருவரின் செயலை கண்டித்து அந்த வியாபாரி காய்கறிகளை கொட்டினார்.

இந்நிலை பற்றி அறிந்த எஸ்.பி நேரில் அவரது இல்லம் சென்று அவரை சமாதானப்படுத்தினார்.

கொரோனா விழிப்புணர்வை இவர் அதிகம் ஏற்படுத்தினார். இதற்காக அரசுக்கு உதவுவதற்காக சில அப்ளிகேசனை தயார் செய்தார்.

இவர் சமீபத்தில் திமுக ஆட்சிக்கு வந்த உடன் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியில் இருந்து செல்கிறேன் என அம்மாவட்ட மக்களுக்கு நன்றியை சொல்லிவிட்டு சென்றுள்ளார் இவர்.

பாருங்க:  நிரோத் உபயோகியுங்க- நடிகர் பார்த்திபன் கண்ணீர்
Previous articleவணக்கம்டா மாப்ள ரம்ஜானுக்கு வருகிறது
Next articleபிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா