Court warning on catching chinnathambi elephant

மயக்க ஊசி போட்டு சின்னதம்பி யானையை பிடிக்க திட்டம்

உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவரும் சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த சில நாட்களாகவே உடுமலைப்பேட்டை மக்கள் வசிக்கும் பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி வருகிறது. அதைபிடிக்க 2 கும்கி யானைகள் வரவழகைப்பட்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இந்நிலையில், சின்னதம்பி யானையை துன்புறுத்தாமல், காயப்படுத்தாமல் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனவே மயக்க ஊசி செலுத்தி சின்னதம்பியை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.