piyush - மத்திய பட்ஜெட் - தனிநபர் வருமான வரி விலக்கு

மத்திய பட்ஜெட் – தனிநபர் வருமான வரி விலக்கு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய  பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி விலக்கு ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருகிற மே மாதம் நாடு நாடாளுமன்ற தேர்தல் சந்திக்கவுள்ள நிலையில், பாஜக அரசின் சார்பில் இன்று இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  நிதியமைச்சர் அருண்ஜேட்லி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2019-20 நிதி ஆண்டுக்கான இந்த இடைக்கால பட்ஜெட்டில், எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்த தனிநபருக்கன வருமான வரி விலக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.3 கோடி பேர் பயன்பெறுவார்கள் என பியூஷ் கோயல் அறிவித்தார். மேலும், நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டே வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.