மதுரை மற்றும் திருநெல்வேலியில் 6 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் மாற்றம்!

363

2019ம் கல்வி ஆண்டின், பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழகத்தில் 14 நகரங்களில் நாளை (மே 5) நடக்கவுள்ளது. இதற்கான தேர்வு நடைபெறும் இடங்கள் ஏற்கனவே அறிவுதெதிருந்த நிலையில், தற்போது மதுரை மற்றும் திருநெல்வேலியில் ஒரு சில இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

மதுரையில் உள்ள ராமேஸ்வரம் உயர் நிலைப் பள்ளிக்குப் பதிலாக வேலம்மாள் நகரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்குப் பதிலாக மதுரை அழகர் கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண வித்யாலயா பள்ளியிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்குப் பதிலாக ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் நடைபெறும் என தேசிய முகாமை அறிவித்துள்ளது.

இதேபோல், மைக்கல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குப் பதிலாக, தனபாண்டியன் நகரில் உள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது.கேந்திரிய வித்யாலயா பள்ளிக்குப் பதிலாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள சி.எஸ்.ராமாசாரி மெட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா மாண்டேசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்குப் பதிலாக மேலகுயில்குடி சாலையில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ பள்ளிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்கள் மாற்றம் செய்யப்பட்ட இடங்களை அறிந்துக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாருங்க:  அதிமுக சந்தித்த தோல்வி - முதல்வர் பதவியை குறிவைக்கும் ஓ.பி.எஸ்