Published
2 years agoon
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு தற்போது மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குவாலியர் நகர கோட்டைகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது.
கார்த்தி, த்ரிஷா, ப்ரகாஷ்ராஜ் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து 500 கோடி பொருட் செலவில் தயாரிக்கிறது.
குவாலியர் நகரில் நடக்கும் படப்பிடிப்புக்காக அதிகமான குதிரைகள் 5 லாரிகளில் சென்னையில் இருந்து சென்றுள்ளன.
இந்த லாரிகளை மத்திய பிரதேச போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.பின்பு போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதில் சிலரும் அங்கு விசாரித்த போது, குதிரைகளை கொண்டு வந்த குழுவினரிடம் போதுமான ஆவணங்கள் இருந்தது தெரிந்தது. இக்குதிரைகள் அனைத்தும் குவாலியரில் நடைபெறும் தமிழ்ப் படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்பட்டது. இதை மணிரத்னத் திடமும் உறுதிசெய்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் குதிரைகள் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
இயக்குனர் மணிரத்னத்துக்கு பாரத் அஷ்மிதா விருது இன்று வழங்கப்படுகிறது
பொன்னியின் செல்வன் – நடிகர் ரகுமானின் போர்ஷன் விவரம்
பொன்னியின் செல்வன் அப்டேட்
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அப்டேட்
நவராத்திரி திரைப்படம் ரீமேக் ஆகிறதா
இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள்- இயக்குனர் ஷங்கர் மணிரத்னம் கலந்து கொண்டனர்