மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்

369
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில், கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை நிர்ணயித்து உள்ளது, தேர்தல் ஆணையம்.

முதல் முறையாக போட்டியிடும், கமல் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. ஆனாலும், தங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடும் என கூறியுள்ளார்.
இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் வரவேற்க்கப்பட்டு, பலரும் விண்ணபங்களை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து உள்ளது.

இது குறித்து கமல் கூறுகையில்,

‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்கியதுக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி கூறினார். மேலும் மக்கள் நீதி மய்யக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் மிகவும் பொறுத்தமானது என தெரிவித்தார்.

தமிழகத்தில், புதிய சகாப்ததிற்கும், இந்திய அரசியலுக்கும், பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும் என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  எம்.ஜி.ஆரும்.. ஜெயலலிதாவும் ஓடியிருப்பங்க- முதல்வரை கலாய்த்த தினகரன்!