மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா!

396
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தின சிறப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கோவை சரளா, தான் மக்கள் நீதி மய்யக்கட்சியில் இணைவதாக அறிவித்தார். எந்த கட்சியில் இணையலாம் என பல நாள் யோசனைக்கு பிறகு இது தான் நமக்கு சரியான கட்சி என்று முடிவு செய்து இணைந்ததாகவும் கூறினார்.

அவர் பேசுகையில், சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வந்தால், அவர்களுக்கு என்ன தெரியும் என பலரும் விமர்சனம் செய்வர் ஆனால், சினிமா நடிகர்களுக்கு தான் எல்லாம் தெரியும். அவர்கள் தான் அனைத்து கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கின்றனர். அவ்வாறு நடிப்பதால் அனைவரின் மனநிலையை, அவர்களின் தேவையை எங்களால் தான் புரிந்துக்கொள்ள முடியும் என அவர் கூறினார்.

பின் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்,

நாங்கள் வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை காண முடியும் என்றார். தனக்கு பின் கட்சியின் தலைமை ஏற்க மகளோ, மைத்துனரோ வரப் போவதில்லை என உறுதி அளித்தார்.

பாருங்க:  வலிமை பட அப்டேட்