போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு; அஜித், விஜய், சூர்யா!

394
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு

நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்று வருகின்ற நிலையில் மக்களிடையே அதீத கவனம் இல்லாத நிலையில் விழிப்புணர்வு முகாம் நடத்த கோரி மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இம்மனு மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கில் சொட்டு மருந்து முகாம் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை என்றும், அதுகுறித்து விளம்பரங்கள் எதுவும் வெளிவராததால் மக்களிடையே கவனம் இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, பதில் உரைத்த நீதிபதிகள் மக்களுக்கு பரிச்சியமான முகங்கள் விளம்பரம் செய்தால், எளிதில் மக்களை சென்று அடையும் என கூறினர்.இதனால், தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர்கள், அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை எதிர் மனு தாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

செய்தித் தாள்கள் மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கூறி வழக்கை மூன்று வாரக்காலம் ஒத்திவைத்து உள்ளனர்.

பாருங்க:  சிறுமியின் திருமணத்தை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர் வெட்டிக் கொலை...