பொள்ளாச்சி வழக்கு

பொள்ளாச்சி வழக்கு – பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் இழப்பீடு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ க்கு மாற்ற கோரி தமிழக அரசி அரசாணை வெளியிட்டது.பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் எதுவும் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் அதை மீறி இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், வீடியோக்கள் வெளியிடப்பட்டன.

அதை எதிர்த்து திருச்சி இளமுகில் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், பாலியல் வழக்கில் முதல் தகவல் மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் ஊடகங்களில் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டுருந்தது.அதை மீறினால், இந்திய தண்டனை சட்டம் 228 ஏ பிரிவின் கீழ் 6 மாதம் முதல் 2 வருடம் முதல் சிறை தண்டனை விதிக்க முடியும்.

தற்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் அடையாளத்தை எஸ்.பி வெளியிட்டார்.இதனால், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், பாலியல் சம்பதமான வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணைப்படை அமைக்க வேண்டும், பாலியல் வழக்கில் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள் எதையும் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்திரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ் எஸ் சுந்தர் அமர்வு முன்னால் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்றி புதிய அரசாணை பிறப்பிக்க கோரி அரசுக்கு உத்திரவிட்டனர்.மேலும், அடையாளம் வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட பெண்ணிற்க்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்திரவிட்டு உள்ளனர்.