பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 100 பெண்கள் சிபிசிஐடியில் புகார்!

389
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இதில் பல கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரால் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் சிபிசிஐடிக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியது. அதற்கு குறிப்பிட்ட எண்ணை அறிமுகப்படுத்தினர்.

அதை தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேரால் பாதிக்கப்பட்டவர்கள் பேரில் 118 பெண்கள் புகார் தெரிவித்தனர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட அந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்களும் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், இதில் எத்தனை பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்துள்ளனர் என்பதை கூற போலிஸார் மறுத்துவிட்டனர்.

தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி போலிஸார்கள் முறையாக பதிவு செய்துள்ளனர்.மேலும், புகார் தெரிவித்தவர்கள் மற்றும் தகவல் அளித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  வேறு ஆண்களுடன் உல்லாசம் - காதலன் தற்கொலை!