பொள்ளாச்சி பாலியல் வழக்கு – CBCID-க்கு மாற்றம்!

327

பொள்ளாச்சி, பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சிபிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணையின் போது, சிபிசிஐடி அதிகாரிகள் அந்த வழக்கு சம்பந்தமான தகவல் ஏதேனும் தெரிந்தால், அதை தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தனர். கோவை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வந்து புகார் அளிக்கலாம், பொது மக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படோரின் நலன் கருதி வழக்கு சம்பதமான வீடியோ ஆதாரங்களை வெளியிட வேண்டாம் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை செய்து வருகிறது.

தற்போது அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்திரவிட்டு உள்ளது.
அந்த விசாரணை ஐகோர்ட் நீதிபதி மேற்பார்வையில் நடக்க வேண்டும் எனவும் ஐகோர்ட் பெண் வழக்கறிஞர்கள் முறையீடு செய்திருந்தனர். இந்த கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்து உள்ளது.

பாருங்க:  தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாகக் தடை விதிப்பு!