இயக்குனர் மணிரத்னம் இயக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது.
இங்குள்ள நர்மதா நதியில் ராணி அகில்யா பாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோயில்கள் உள்ளது. கடந்த 5 நாட்களாக இங்கு படப்பிடிப்பு தொடர்கிறது. இங்கு நடிகர் கார்த்தி மற்றும் ரகுமானுடன் நடிகை த்ரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டில் ஆண்டராணி அகில்யா பாயால் இந்த லிங்கங்கள் அமைக்கப்பட்டதாம்.
இந்நிலையில், நேற்று அக்கரையில் ஒரு படகில் த்ரிஷா வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. கரையில் வந்திறங்கிய த்ரிஷா அங்கு தரையிலிருந்த ஒரு நந்திமற்றும் சிவலிங்கத்திற்கு இடையேநடந்து வரும் காட்சி இடம்பெற்றது. அப்போது அவரது காலில் அணிந்திருந்த காலணிகளால், அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக த்ரிஷாவையும், இயக்குநர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹரிகேஷ்வரின் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இதுதொடர்பாக ஹரிகேஷ்வர் காவல் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.