பொது இடங்களில் அசிங்கமாக விளம்பரம் செய்வதை கண்டித்து அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுற்றுசூழல் மற்றும் விலங்குகளுக்கான அரசு அமைப்பு தாக்கல் செய்துள்ள மனு :
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், சாலையோர மரங்கள், மலைகள், குன்றுகள் ஆகிய இடங்களில் தனியார் நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் விளம்பரம் செய்கின்றன.
இத்தகைய செயல், இயற்கை வளங்களை அசிங்கப்படுத்தும் செயலாகும். அழகான வளங்களின் தன்மையை மாற்றக் கூடாது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்திரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும் படி, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ. நஸீர், சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு முன் வெளிவந்தது.
அப்போது, நீதிபதிகள் :
பொது இடங்களில், அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வதை அனுமதிக்க முடியாது. இதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை தமிழக அரசு இரு வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்திரவிட்டனர்.