புதிதாக வீட்டிற்கு வந்த இருவர்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு (வீடியோ)

230

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி 75 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது 8 பேர் மட்டுமே இருந்த நிலையில், சேரன் வெளியேற்றப்பட்டார். ஆனால், ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கிருந்து உள்ளே யார் என்ன பேசுகிறார் என்பதை அவர் கேட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஃபிரீஸ் டாஸ்க்(Freeze task) கொடுக்கப்படவுள்ளது. அதாவது, போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினரை உள்ளே அனுப்புவார்கள். ஆனால், அவர்களை பார்த்தவுடன் பிக்பாஸ் ஃபிரீஸ் கூறி விடுவார். இந்த டாஸ்கை நாம் பிக்பாஸ் முதல் 2 சீசனிலுமே பார்த்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து முகேனின் தாய் மற்றும் சகோதரி திடீரென வீட்டிற்குள் வருகிறார்கள். எனவே, பிக்பாஸ் வீடே மகிழ்ச்சியில் திளைக்கும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கவின்? - வீடியோ பாருங்க