பி.எம் நரேந்திர மோடி படம் ட்ரைலர் வைரலாகி வருகிறது!

357

பிரதமர் நரேந்திர மோடியின் கதையை படமாக எடுக்கப்பட்டது. இதில் விவேக் ஓப்ராய் பிரதமர் மோடியாக நடிக்கிறார். ஓமங்க் குமார் இப்படத்தை இயக்க, சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் மற்றும் சுரேஷ் ஓப்ராய் தயாரித்துள்ளனர்.

இப்படம், மோடியின் வாழ்க்கை பாதையை விரிவிக்கிறது. இதன் படப்பிடிப்புகள், பிரதம் மோடியின் சொந்த மண்ணான குஜராத் மாநிலத்தில் எடுக்கப்பட்டது. இப்படப்பிடிப்பு ஜனவரி மாதம் 28ம் தேதி தொடங்கியது.

தற்போது ட்ரைலர் வெளியாகி உள்ள நிலையில், ஏப்ரல் 5ம் தேதி வெளியாகவுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஸரினா வாஹாப் மோடியின் தாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பர்கா பிஸ்ட் மோடியின் மனைவியாகவும், மனோஜ் ஜோஷி அமித் ஷா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள ட்ரைலர் 2 நிமிடம் 35 விநாடிகளை கொண்டுள்ளது. அதில் மோடியின் குஜராத் முதலமைச்சராக இருந்த கதை, மற்றும் சன்னியாசம் மேற்கொள்ளும் காட்சிகள், இமய மலையில் மேற்கொண்ட ஆன்மிக காட்சிகள், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

PM Narendra Modi | Official Trailer | Vivek Oberoi | Omung Kumar | Sandip Ssingh | 5th April

பாருங்க:  கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு