Connect with us

பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை!

பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு

Tamil Flash News

பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை!

ஓமங்குமார் இயக்கத்தில், விவேக் ஓப்ராய் நடித்து வெளியாகவுள்ள படம் பி.எம். நரேந்திரமோடி. இப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இதனால், தேர்தல் வருவதால் இப்படம் வெளியாகக்கூடாது எனவும், இப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது எனவும், எதிர்கட்சிகள் பலரும் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் பலரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

அந்த விசாரணையில், தேர்தல் விதிமுறைகளை பி.எம். நரேந்திரமோடி படம் மீறுவதாக தெரியவில்லை. அதனால், இப்படத்திற்கு தடை விதிக்க ம்டியாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.ஆனால், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. அதையடுத்து, தேர்தல் ஆணையம், தற்போது பி.எம். நரேந்திரமோடி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், தேர்தலுக்கு பிறகு படத்தை வெளியிடலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் படத்தை முழுமையாக ஆராய்ந்த பின்னரே படத்தை வெளியிடுவது குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

More in Tamil Flash News

To Top