இந்திய விமானப்படை விங் கமான்டர் அபிநந்தனின் பிரபலமான 'தமிழக' மீசை

பிறந்த குழந்தைக்கு “அபிநந்தன்” பெயரை சூட்டி பெருமிதம் அடைந்த தாய்!

பீகார் மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதில் இந்திய போர் விமானி அபிநந்தன், பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பிறகு மார்ச் 1 மாலை பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னையை சேர்ந்த அபிநந்தனின் துணிச்சலையும், நாட்டுப்பற்றையும் பாராட்டி நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அதனை தொடர்ந்து பீகார் மாநிலம் கயாவில் உள்ள இரபாவதி மருத்துவமனையில் அல்கா என்ற பெண், தனக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, வீர தீர செயலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அபிநந்தனின் பெயரை சூட்டினார்.

மேலும் தன் குழந்தையை ஒரு வீரனாக வளர்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணின் கணவரும், குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.