பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய கவின் மற்றும் தர்ஷன் இருவரும் தற்போது மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
கமல்ஹாசன் பங்கேற்று நடத்தும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த வாரம் இறுதியில் முடிவடையவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது ஷெரின், லாஸ்லியா, சாண்டி, முகேன் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்களை குஷிபடுத்தும் விதமாக தினமும் புதிய விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தர்ஷனும், கவினும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்களை கண்டதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். குறிப்பாக லாஸ்லியா கவினை காதலுடன் பார்க்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.
#Day103 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/UGy4P2ILzb
— Vijay Television (@vijaytelevision) October 4, 2019