பிகில் இசையீட்டு விழாவில் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக் கூடாது என அப்படத்தின் நாயகன் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, ஆனந்தராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது. பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார். எனவே, பெரிய அளவில் பேனர்கள் எதுவுமில்லாமல் இசையீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சாலையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்தார். அதன் தொடர்ச்சியாகவே விஜய் இந்த உத்தரவை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.