பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து மாணவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பொள்ளாச்சியில், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டும் கும்பலை கண்டித்து கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் கடும் தண்டனை விதிக்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அது மட்டுமின்றி இவர்களுக்கு தக்க தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் சமுக வலைதளங்களிலும் கொந்தளித்து வருகின்றனர்.
திருச்சி, கோவை, திருவண்ணாமலை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், போராட்டத்தை தடுக்க சில தனியார் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் பல முக்கிய இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.