பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள தமிழக வீரர் அபிநந்தன்!

540
பாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள தமிழக வீரர் அபிநந்தன்!

பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ள விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் பகுதியில் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் நாட்டிற்குள் செயல்படும் ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தி முகாம்களை இந்திய ராணுவம் குண்டு வீசி அழித்தது. இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த 2 இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதில், 2 இந்திய விமானப்படை விமானிகள் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், 3 வீரர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த மேஜர் அபிநந்தன். திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனவூரை சொந்த ஊராக கொண்ட அபிநந்தன்.

சென்னை அருகேயுள்ள தாம்பரம் பகுதிக்கு அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, அபிநந்தனை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

பாருங்க:  அஜித் கொடுத்த சூப்பர் ஐடியா ; அசந்து போன வினோத் : தல 60 அப்டேட்