Tamil Flash News
பல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு!
தமிழகத்தில், இன்று மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி பல்வேறு இடங்களில், வாக்குப்பதிவு ஆரம்பித்து நடந்து வருகிறது.
இதில், பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. திருவாரூர் ஜி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் செட்டிமாங்குறிச்சி, நாகை தலைஞாயிறு ஓரடியம்புலம், கடலூர், சென்னை நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம், காக்கனூர், கடம்பலூர், ஒட்டஞ்சத்திரம், பெரம்பலூர் மவுலானாபள்ளி, சித்தாபூதூர் அரசு பள்ளி, தேனி பெரியகுளம், ஸெவன்த்டே பள்ளி ஆகிய இடங்களில் ஓட்டு இயந்திரங்கள் கோளாறாகி, ஓட்டு பதிவில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.
மேலும், சென்னை ஆழ்வர்ப்பேட்டையில், மின்வெட்டு காரணமாக வாக்குப்பதிவில், தாமதம் ஏற்ப்பட்டது. மேலும், ஊட்டி, மதுரை மேலூர், சேலம் ஆத்தூர், உசிலம்பட்டி, அவினாயாபுரம் என பல்வேறு இடங்களில் ஓட்டு இயந்திரங்கள் பழுதாகி உள்ளது.
