பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய ரஜினி…

பரபரப்பான சூழ்நிலையில் ஸ்டாலினை சந்தித்து பேசிய ரஜினி…

நடிகரும் ரஜினிகாந்தும், திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து பேசிக்கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி இன்னும் தனது கட்சியை தொடங்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்து பேசினார். அங்கு திருமாவளவனும் இருக்க விஷயம் பரபரப்பானது. ஆனால், தனது மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்கவே தான் சென்றதாக ரஜினி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இன்று ஸ்டாலினை ரஜினி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கும் அவர் பத்திரிக்கை கொடுத்ததாக தெரிகிறது. சிறிது நேரம் ஸ்டாலிடம் பேசிவிட்டு ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.

என்னதான் ரஜினி காரணம் கூறினாலும், பரப்பான அரசியல் சூழ்நிலையில் ஸ்டாலினை ரஜினி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.