பத்ம விருதுகள் வழங்கும் விழா; ஜனாதிபதி வழங்கினார்

364
பத்ம விருதுகள் வழங்கும் விழா

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருது வழங்கும் இவ்விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் மற்றும் பல அமைசர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில், கலை, சேவை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மொத்தம் 56 பத்மபூஷன், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் வழங்கப்படன.

தமிழக சமூக சேவகர், மதுரை சின்னப்பிள்ளை, அறுவை சிகிச்சை நிபுணர் ராமசாமி வெங்கடசாமி, கண் மருத்துவர் ஆர்.வி. ரமணி, நடிகர் பிரபுதேவா, பாடகர் மற்றும் இசையமைப்பாளரான ஷங்கர் மகாதேவன், டென்னிஸ் வீரர் ஷரத் கமல், முன்னால் வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.

மலையாள நடிகர் மோகன்லால், விண்வெளித்துறை விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.மொத்தம் 112 விருதுகள் உறுதி செய்த நிலையில், மேலும் சில விருதுகள் வழங்கும் விழா மார்ச் 16ல் நடக்கவுள்ளது.

பாருங்க:  சேரனுக்கு நன்றி தெரிவித்த ஸ்னேகன்