தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணியளவில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். மேலும், அவருடன் அமைச்சரவையில் பங்கேற்கும் பல்வேரு எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறையும், அமித்ஷாவுக்கும் உள்துறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் ராணுவ அமைச்சராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.