நான் கூறியது சரித்திர உண்மை – கமல்ஹாசன் மீண்டும் பரப்புரை

260
நான் கூறியது சரித்திர உண்மை

கோட்சே பற்றி நான் கூறிய கருத்து முற்றிலும் உண்மை என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என அவர் தெரிவித்தார். மேலும், முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதைக் கூறவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு சொல்கிறேன். அந்த இந்து தீவிரவாதியின் பெயர் நாதுராம் கோட்சே” என அவர் தெரிவித்தார்.

இதற்கு பாஜகவினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதோடு, தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். மதச்செருக்கு, சாதிச்செருக்கு எல்லாம் நிற்காது. நான் கூறியது சரித்திர உண்மை. இந்த அரசு அகற்றப்பட வேண்டும். நாங்கள் அகற்றுவோம்” என கமல் பேசினார்.

பாருங்க:  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'டார்ச் லைட்' சின்னம்