நாடளுமன்ற தேர்தலில், கூட்டணிக் குறித்து தேமுதிக அணி இழுத்தடித்து வருகிறது.
திமுகவில் பேச்சு வார்த்தை நடத்துவதாக, தேமுதிக துணை செயலர் சுதீஷ் கூறினார். தேமுதிக 7 தொகுதிகள் கேட்டதாகவும், திமுக கைவிரித்ததாகவும் தகவல் வெளியானது.
அதிமுக 4 தொகுதிகள் ஒதுக்கவதாகவும் தகவல் வெளியானது. தேமுதிக துணை செயலர் சுதீஷ் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திப்பதற்காக, மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார்.
அங்கு, பியூஷ் கோயல் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியைப் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் 1 மணி நேரமாக நடந்த இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் கிட்டாமல், இழுபறியே நீடித்தது. அதற்கு முன்னால் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் தேமுதிக உடனான கூட்டணி உறுதியானது என்று தெரிவித்தார்.
ஆனால், திமுக அமைச்சர் துரை முருகன் கூறுகையில், தேமுதிகவிற்கு அதிமுகவில் இணைய விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறினார். இதனால், தேமுதிக கூட்டணியில் பெறும் இழுபறி மற்றும் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.