நயன்தாரா குறித்த சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ராதாரவிக்கு பலரும் கண்டனம்!

391
நயன்தாரா குறித்த சர்ச்சையில் மாட்டிக்கொண்ட ராதாரவி

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நயன்தாரா பேயாகவும் நடித்துள்ளார், சீதாவாகவும் நடித்துள்ளார். இப்போது பார்த்தவுடன் கும்பிட தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிட தோன்றுபவர்களும் நடிக்கலாம் என்று அவர் கூறியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் கூறுகையில் :

”ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டனக் குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ என்று எனக்கு எந்த துப்புமில்லை. ஆதரவுமில்லை.

தன் மீதான கவனத்தை ஈர்ப்பதற்காக ராதாரவி இதைச் செய்துகொண்டிருக்கிறார். மூளையற்றவர். அந்த குப்பைக் கருத்தைக் கேட்டு குழுமியிருந்தவர்கள் சிரித்ததும், கைதட்டியதும் கவலையளித்தது. இப்படி ஒரு நிகழ்ச்சி முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.

இத்தகைய நிகழ்ச்சிகள் வேலையற்ற நபர்களுக்கு தங்கள் அறிவற்ற கருத்துகளைச் சொல்ல இடமளிக்கிறது. என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து விஷால் கூறுகையில் :

அன்புள்ள ராதாரவி சார். ஆம், நடிகர் விஷால் இவ்வாறு தெரிவித்து உள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற வகையில் உங்களுக்கு எதிரான இந்த கண்டனக் கடிதத்தில் கையெழுத்திட்டு இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அண்மையில் நீங்கள் வெளிப்படுத்திய முட்டாள்தனமான பேச்சு அதுவும் பெண்களை மையப்படுத்தி நீங்கள் பேசியதை கண்டிக்கிறேன். வளருங்கள் சார். இனிமேல் உங்களை நீங்கள் ரவி என்று மட்டுமே அழைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ராதா என்பது ஒரு பெண்ணின் பெயரல்லவா?

பாருங்க:  'தர்மபிரபு' படம்|Dharmaprabhu -Teaser டீசர் வைரலாகி வருகிறது!

இவ்வாறு விஷால் தெரிவித்து உள்ளார்.மேலும் ட்விட்டரில், #BandRatharavi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.