- Homepage
- Latest News
- நம்முடைய ஆத்ம பலத்தை அதிகரிக்கும் முறைகள்
நம்முடைய ஆத்ம பலத்தை அதிகரிக்கும் முறைகள்
தமிழ் மக்களே! நம்முடைய ஆத்ம பலத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்!!!
உலகமயமாக்கல் என்ற பொருளாதாரத் தத்துவம் நமது நாடு முழுவதும் பரவிய பிறகு ஒவ்வொரு குடும்பமும் போதுமான அளவு வருமானம் இல்லாமல் தவிக்கிறது.
வருமான பற்றாக்குறையால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிம்மதியாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான தீர்வுகளை நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் எப்போதோ நமக்கு உபதேசமாக தெரிவித்து விட்டார்கள் .
மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொருவரும் ஆத்மபலத்தை அடைய முடியும்.
1 ஒவ்வொரு சிவாலயத்திற்குச் சென்று வழிபடும் போதும் அங்கே உள்ள சண்டிகேஸ்வரர் சன்னதியில் கை தட்ட வேண்டும் இதன் மூலமாக நம்முடைய பாவ புண்ணிய கணக்கை நாம் சிவாலயம் சென்றதற்கான புண்ணிய கணக்கு பதிவு செய்யப்படும்.
2.ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி திதி அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று அங்கு ஒவ்வொரு சுவாமி சன்னதிக்கும் படையல் இட வேண்டும் .உங்கள் கோவில் நடைமுறை படி படையல் இட வேண்டும்.90 நிமிடங்கள் வரை உங்கள் கோரிக்கைகளை மனதார உங்கள் குல தெய்வத்திடம் வேண்டி கொள்ள வேண்டும்.
பிறகு ,சுவாமிக்கு வைக்கப் பட்ட படையல் ஒன்றை முறைப்படி வாங்கி கொண்டு உங்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும்.(அன்றைக்கு மட்டும் மற்ற கோவில்களுக்கு செல்ல கூடாது; மற்ற உறவினர் வீட்டிற்கும் போக வேண்டாம்!!!) இப்படி மூன்று ஆண்டுகள் வரை இடைவிடாமல் குல தெய்வம் வழிபாடு செய்து வர வேண்டும்.
3. தமிழ்நாட்டின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படக்கூடிய மகா வாராகியின் அருளைப் பெற ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் .
இதற்கு தினமும் இரவில் ,தூங்க செல்லும் முன்பு வராஹி மாலை என்ற பாடல் தொகுப்பை(ஒரு பாடல் 4 வரிகளை கொண்டது.இப்படி 32 பாடல்கள் கொண்டது வராஹி மாலை!) ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டும்.
மிகவும் கடுமையான துயரங்கள் மற்றும் பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டு இருப்பவர்கள் தினமும் இரவில் ஐந்து முறை வராகிமாலை ஜெபித்து வர வேண்டும்.(மற்றவர்கள் தினமும் இரவில் ஒரு முறை ஜெபம் செய்தால் போதுமானது)
ஒரு நாளைக்கு ஐந்து முறை வீதம் மூன்றாண்டுகள் ஜெபித்து வருவதன் மூலமாக
மறைமுகமான எதிர்ப்புகள்
மாந்திரீக பிரச்சனைகள்
மற்றும்
வருமானப் பற்றாக்குறை
உடல்நலக் கோளாறு
மன அழுத்தம்
மன அழுத்தத்தால் உண்டாகக் கூடிய குடும்ப குழப்பங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும் .
வாராகி மாலை தினமும் ஜெபிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிட கூடாது மது அருந்தக் கூடாது.
நம்முடைய தமிழ்நாட்டில் 95 சதவிகிதம் மக்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அப்பாவிகளை தான் மீதி ஐந்து சதவிகிதம் மக்கள் தேவையில்லாத பிரச்சனையில் சிக்க வைக்கிறார்கள்.
இதனால் 95 சதவிகித அப்பாவி மக்கள் அந்தப் பிரச்சினை மற்றும் அவமானங்களிலிருந்து மீள்வது எப்படி? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .
நண்பர் போல நடித்து அல்லது உறவினராக காட்டிக்கொண்டு நம்முடைய முன்னேற்றத்தை தடுப்பதில் முழு கவனத்தையும் இந்த ஐந்து சதவீத மக்கள் செலவிடுகிறார்கள்.
இந்த துரோகங்களை எதிர்கொள்ள அன்னை வராஹியின் அருளை பெற முயற்சி செய்வது அவசியம்.
சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.