நடிகர் மற்றும் முன்னாள் எம்.பி.யான ஜே.கே.ரித்தீஷ் தீடீர் மரணம்

நடிகர் மற்றும் முன்னாள் எம்.பி.யான ஜே.கே.ரித்தீஷ் தீடீர் மரணம்!

J.K. Rithesh| நடிகர் ஜே.கே ரித்தீஷ் மாரடைப்பால் காலமானார்!

நடிகர் J. K ரித்திஷ் மாரடைப்பால் காலமானார் . 46 வயதான இவர் இன்று காலமானார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரித்திஷ். முன்னாள் M. P. , இவர் இன்று மதியம் மாரடைப்பால் காலமானார்.

முன்னால் திமுக MP ஆக இருந்த ரிதிஷ், தற்போது அதிமுக வில் இணைந்தார். 2009ம் ஆண்டு திமுக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். பின், 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, ஆர்.ஜே. பாலாஜியின் படமான எல்.கே.ஜி திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல், நடிகர் சங்கத்தில் நிறைய பணிகளை செய்துள்ளார். முன்னால், விஷாலுடன் இணைந்து நடிகர் சங்க தேர்தலில் பணி புரிந்தார். ஆனால், தற்போது விஷாலுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் பணி புரிந்து வந்தார்.

இன்று, ராமநாதபுரம் நாடாளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்தோர் அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிறிந்துவிட்டதாக கூறினர்.