நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு தினம் இன்று

10

தமிழில் நடிகருக்கெல்லாம் பெரிய நடிகர் என்று சிவாஜியை கூறலாம். கணேசன் என்ற இயற்பெயருடைய இவர் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் கம்பீரமாக நடித்ததால் சிவாஜிகணேசன் என்ற பெயரானது.

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த இவர் 1952ல் வந்த பராசக்தி படத்தின் மூலம் நடிக்க வந்தார்.

தொடர்ந்து அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். எப்படிப்பட்ட வேடங்கள் என்றாலும் சிவாஜி கணேசன் சிறப்பாக நடிப்பார் என்ற நிலையை அவர் அடைந்தார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், தெனாலிராமன், கர்ணன், ராஜராஜசோழன், திருவிளையாடல்  என நாம் சரித்திரத்தில் படித்தவற்றை எல்லாம் காட்சிவடிவத்தில் இவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ என நினைக்க வைத்தார்.

புதிய பறவை, பாசமலர், பாலும் பழமும், பார் மகளே பார்,மஹா கவி காளிதாஸ், முதல் மரியாதை, தேவர் மகன், படையப்பா வரை பல்வேறு விதமான கம்பீரமான படங்களில் நடித்த நடிகர் சிவாஜி கணேசன் 2001ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் மரணமடைந்தார்.

இன்று சிவாஜியின் நினைவு நாள்.

பாருங்க:  லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள்
Previous articleஅருள்நிதி நடிக்கும் தேஜாவு
Next articleமாகாபாவின் சமூகப்பணி