Connect with us

தொடரும் தமிழன்னை சர்ச்சை-அண்ணாமலை அதிரடி

Latest News

தொடரும் தமிழன்னை சர்ச்சை-அண்ணாமலை அதிரடி

இத்தாலி வாடிகன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்த்தாய் என்ற பெயரில் ஒரு படத்தை தமிழக முதல்வர் பகிர்ந்து இருந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே அந்த படம் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர் ரஹ்மான் தான் அந்த படத்தை முதலில் பகிர்ந்திருந்தார். கலையம்சமான தமிழ்த்தாயை இப்படி பகிர்ந்து இருந்தது பலருக்கும் பிடிக்காத நிலையில் முதல்வரும் அந்த படத்தை பகிர்ந்திருந்தார்.

உடனே பதிலுக்கு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கலையம்சம் கொண்ட தமிழ்த்தாயை பகிர்ந்து இருந்தார். அந்த தமிழ்த்தாய் படத்தில் வந்த ஸ என்ற எழுத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலுக்கு அண்ணாமலை கொடுத்த அதிரடி பதில்தான் இது.

தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது!

ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்! என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.

More in Latest News

To Top