தென்தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமாரி மற்றும் கர்நாடகம் வரையில் உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருச்சி, கரூர்,நாமக்கல், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களில் அதிகபட்சமாக 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகிறது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடனும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை மையம் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.