திருவாரூரில் தேர்தல் பிராச்சாரம் – தொடங்கினார் ஸ்டாலின்

396

மக்களவை தேர்தல் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.பிரசாரத்துக்காக நேற்று மாலை திருவாரூர் வந்த ஸ்டாலின், இரவு தன் பாட்டியின் நினைவு இடம் சென்று மாலை அணிவித்தார்.

பின் தன் சொந்தங்கள் வீட்டில் தங்கி, இன்று காலை சன்னதி தெருவில் இருந்து தொடங்கி வாசன் நகர், திருவள்ளுவர் நகர், மருத பாடி, கீழ் வடம்போக்கித் தெரு, காந்தி நகர், நேதாஜி தெரு உட்பட பல்வேறு இடங்களில் பிராச்சார பணியை மேற்கொண்டார்.திருவாரூர் மக்கள் ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பலரும் அவர்க்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இளைஞர்கள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

வாக்கு கேட்க சென்ற ஸ்டாலின், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தி.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பூண்டி கலைவானன் ஆகியோருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார்.

பாருங்க:  தினகரன் அதிமுகவில் இணைவார் - மதுரை ஆதினம்!