திருநாவுக்கரசு வீட்டில் சோதனை; லேப்டாப், பென்ட்ரைவ் பறிமுதல்

483

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணமான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் சிக்கியது.
பொள்ளாச்சியில், முகநூல் மூலம் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த கும்பளை சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதையடுத்து, நேற்று மதியம் 3 மணியளவில், திருநாவுக்கரசின் மாக்கினாம்பட்டியில் உள்ள வீட்டில் ஆய்வு செய்தனர். சுமார் இரவு 7 மணிவரை நடந்த, இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களான லேப்டப் மற்றும் பென்ட்ரைவ் கிடைத்துள்ளது.

இது மட்டுமின்றி, பொள்ளாச்சி சுற்று வட்டாரத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், திருநாவுக்கரசு நண்பர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பாருங்க:  கோகுலத்தில் சீதை 25வது வருடம்- படம் உருவான உண்மை சம்பவம் குறித்து இயக்குனர் அகத்தியன்