திமுக பக்கம் சாயும் அமமுக - சசிகலாவுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிச்சாமி

திமுக பக்கம் சாயும் அமமுக – சசிகலாவுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக சிறையில் உள்ள சசிகலாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தூதுப்படலம் நடத்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

திமுக பக்கம் சாயும் அமமுக - சசிகலாவுக்கு தூதுவிட்ட எடப்பாடி பழனிச்சாமி 01

நடந்து முடிந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றும் என உளவுத்துறையின் கொடுத்த அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்செட் ஆக்கியுள்ளதாம். மேலும், அமமுக, கமல்ஹாசன், சீமான் போன்றோர் அதிமுகவின் ஓட்டுகளை பிரிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

குறைந்தது 5 இடத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் பழனிச்சாமி இருக்கிறார். இந்நிலையில், திமுகவோடு கை கோர்த்து அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ சமீபத்தில் கொடுத்த பேட்டி அதிமுக தலைமையை ஆட்டம் காண செய்துள்ளது.

எனவே, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அமமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்பதால், சசிகலாவிடம் சமாதானம் பேசும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி இறங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சமீபத்தில் பெங்களூர் சிறையில் சசிகலாவை எடப்பாடியின் தூதுவர் சந்தித்து பேசினாராம். ஆனால், அவரிடமிருந்து சாதகமான பதிலை அவர்களால் பெறமுடியவில்லை. அவர் இன்னும் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.

எனவே, அடுத்து என்ன செய்வது என்கிற ஆலோசனையில் அதிமுக தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.