Entertainment
தாங்க முடியாத விலையில் தக்காளி- மக்கள் அதிர்ச்சி
தக்காளி விலை உயர்வுதான் தற்போது எல்லா இடங்களிலும் பெரிய பேசு பொருளாக உள்ளது. தக்காளி இல்லாமல் எந்த உணவும் இல்லை. குழம்புகள், கூட்டுகள், பொறியல்கள், ரசம் என சாப்பாட்டின் அனைத்து விசயங்களுக்கும் தக்காளி தேவையான பொருளாக உள்ளது.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் தக்காளி விலை உயர்வு அதிகரித்துள்ளது. நிறைய செடிகள் அழுகிவிட்டதாலும் வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் தக்காளி விலை வரலாறு காணாத விலை உயர்வாக இன்று கிலோ 130க்கு விற்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் ரூ 20 ரேஞ்சில் விற்கப்படும் தக்காளிக்கு இவ்வளவு விலை உயர்வா , விட்டால் தங்கம் விலைக்கு தக்காளி வந்து விடும் போல என இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர்.
