தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 மக்களவை தேர்தல் 2019; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

355
2019 மக்களவை தேர்தல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.அந்த சந்திப்பில் பேசிய இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, சுனில் அரோரா, மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடக்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

7 கட்டமாக நடக்க உள்ள மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19ம் தேதி வரை நடக்கவுள்ளது.

7 கட்டங்களாக, நடைப்பெற உள்ள தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.வாக்காளர் பட்டியலின் விவரங்களை தெரிந்துக்கொள்ள 1950 சேவை எண் வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு.தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமல். பதற்றம் நிறைந்துள்ள வாக்குச்சாவடிகளில் சிசிடிவி அமைக்கப்படும்.

பாருங்க:  கொரோனாவில் இருந்து காப்பாற்றிய டாக்டர் வீரபாபு- ரஜினி சொன்ன அந்த வார்த்தைக்காக செய்த செயல்