தமிழக நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் பலி…

444
தமிழக நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் விபத்தில் பலி.

தமிழகத்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் மருத்துவர் பத்ரிநாத். இவரது மகன் பாலகிருஷ்ணன் ஒரு நீச்சல் வீரர். தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்தும் வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விடுமுறைக்காக சென்னை வந்தார்.

நேற்று இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி அதன் பின் சக்கரத்தில் மாட்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலகிருஷ்ணன் கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற போது, அந்த போட்டியில் அவர் பங்கேற்கக் கூடாது என சிலர் அவரை தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது. எனவே, அவரின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

பாருங்க:  கம்பரின் ஜீவசமாதியில் இயக்குனர் பேரரசு