தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள்

தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள் 2019 அறிவிப்பு

தமிழக அரசின் கலைச்செம்மல் விருது, நவீனபாணி விருது, மரபுவழி விருதுகள் அறிவிப்பு.

ஓவியம் மற்றும் சிற்ப்பக் கலையில் சிறந்த வல்லுநர்களுக்கு கலைச்செம்மல் விருது அறிவிப்பு.
2013-14 முதல் 2017-18 வரையிலான 5 ஆண்டுகளுக்கு 10 கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்கப்பட உள்ளது.

எஸ். கணபதி ஸ்தபதி, ராமஜெயம்,எஸ். தமிழரசி, எஸ். கீர்த்திவர்மனன், கோபாலன் ஸ்தபதி உள்ளிட்டோருக்கு மரபுவழி விருது அறிவிப்பு.

பி.எஸ். நந்தன், பி. கோபிநாத், ஆனந்தநாராயணன் நாகராஜான், சிடக்னஸ், ஜெயக்குமார் ஆகியோர் நவீனபாணி விருதிற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறும் கலைஞர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் செப்பு பட்டையும் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.