தமிழகம் மற்றும் புதுவையில் ‘ரெட் அலர்ட்’!

330

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், பல இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது, வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற உள்ளது. இதனால், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக, தமிழகத்தில் 28ம் தேதி லேசான அல்லது மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனவும், 29ம் தேதி பெரும்பாலான இடங்களில் மழையும், கடலோர பகுதிகளில் கனமழையும் எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

பாருங்க:  அஜித்தை மீண்டும் பார்க்க முடியுமா தெரியவில்லை - அபிராமி ஏக்கம்