தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு!

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பல இடங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய தமிழக தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாஹூ :
கோவையில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோட்டில் வாக்குப்பதிவை உறுதி செய்யும் 20 இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்தலின் போது, ஓட்டு பதிவு இயந்திரங்களை மாற்றுவது வழக்கம் தான்.

தேர்தலுக்கு முன் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. அப்போது ஒரு ஓட்டுச்சாவடியில் 50 ஓட்டுகள் வரை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தேர்தல் அன்று ஓட்டுப்பதிவு இயந்திரத்திலும் ஓட்டுசரிபார்ப்பு கருவியிலும் அவற்றை அழிக்காமல் 13 மாவட்டங்களில் உள்ள 46 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.
தேர்தல் அதிகாரிகள் மட்டுமில்லாமல், வேட்பாளர்களின் ஏஜென்ட்களின் கவனகுறைவால் இந்த தவறுகள் நடந்துள்ளது.

இது, தேர்தலிக்கு பின் தான் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் மூலம் செய்யப்படும் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படும்.

எனவே இப்பிரச்னை குறித்து டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏப்ரல் 29ல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நாளில் முதற்கட்ட தகவலும் தெரிவிக்கப்பட்டது. இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படுமா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

அதுபோல மறுதேர்தல் நடத்தும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த பணிகள் தான் தேனி மற்றும் ஈரோட்டில் நடந்துள்ளன. மற்றபடி வேறு எந்த பிரச்னையும் இல்லை.

மேலும், தர்மபுரி திருவள்ளூர் கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்துவதும் தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனையில் உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே எந்தெந்த இடங்களில் மறு ஓட்டுப்பதிவு என்பதை அறிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.