worldwide corona
worldwide corona

தமிழகத்தில் மேலும் 56 பேருக்குக் கொரோனா! 103 பேர் குணமாகி வீடு திரும்பல்!

தமிழகத்தில் இன்று மட்டும் 56 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக இருந்த நிலையில் இன்று மட்டும் 56 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல இன்று 103 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குணமாகி வீடு திரும்புவர்களின் என்ணிக்கை அதிகமாகியுள்ளன. இதுவரை மொத்தமாக 283 பேர் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.