கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திமுகவின் கலைஞர் ஆட்சியில் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மக்கள் பலரும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்தனர்.
அந்த நேரத்தில் ஆட்சியை இழந்த திமுக அரசு 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்தது.
திமுக அரசு வந்துவிட்டாலே மின்சாரம் இருக்காது என்ற நிலை மாறி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்சாரம் நன்றாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மின்சாரம் அனைத்து ஊர்களிலும் பல முறை கட் செய்யப்பட்டது.
இதனால் மக்கள் கோபமடைந்த நிலையில் இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது,
இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும்
தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.