தமிழகத்தில் மழை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது!

தமிழகத்தில், வெப்ப சலனம் காரணமாக சில தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது, என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரை, தர்மபுரி, நீலகிரி, கன்னியகுமாரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. சில இடங்களில், 140 முதல் 150 கி.மீ வரை சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் அழகர் கோவில் பகுதிகளில், நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்க்டன் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், திருப்பூர், தர்மபூரி மாவட்டம் பென்னாகர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தில், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.