Tamil Flash News
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் – வதந்தி பரப்பியவர் கைது!
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று, தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. இதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதனை அடுத்து, தற்போது தமிழகத்திலும் முக்கிய இடங்களிலும், ரயில்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், இராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும், வதந்தி பரவியது.
பெங்களூர் காவல் துறையினர், தமிழக காவல் துறையினருக்கு, ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், தமிழகத்தில் ரயில்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. மேலும், பெங்களூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, லாரி ஓட்டுனர் சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தகவல் அளித்ததாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த, வதந்தி பரப்பிய லாரி ஓட்டுனரை போலிஸார் கைது செய்தனர். இந்த வதந்தியை பரப்பிய சுந்தரமூர்த்தி முன்னாள் இராணுவ வீரர் என்பதும் அவரை பெங்களூர் போலிஸார் கைது செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.