தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பம்; அஜித், விஜய் வாக்களிப்பு!

382
லோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு ஆரம்பமாகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமான நிலையில் காணப்படுகிறது.

இதில், மக்கள் பலரும் ஆர்வமாக வாக்கு அளித்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக நடிகர் அஜித், அவர் மனைவி ஷாலினியுடன் வாக்குப்பதிவு செய்தார்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 7.45க்கு தனது வாக்கை, நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய். வரிசையில் நின்று வாக்களித்த விஜய், சுமார் 10 நிமிடங்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாமபேட்டை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார்.. அங்கு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.இந்நிலையில், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார்.

பாருங்க:  ஷார்மி பெற்றோருக்கு கொரோனா