பொள்ளாச்சி வழக்கில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுக்கு ஆதரவாக இருந்ததாக பார் நாகராஜன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து, பொள்ளாச்சியில் உள்ள பார் நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.
அதன் பிறகு, இந்த வழக்கில் தன் மீது தவறான பார்வை விழுந்து உள்ளதாகவும், அவை அனைத்தும் வதந்தி என தெரிவித்துள்ளார். தான் தலைமறைவாக இல்லை என்றும், போலிஸ் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பதாக கூறினார்.
இந்த விவகாரத்தில், தன்னை பற்றி தவறான தகவல் பரப்புவது தனக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது என தெரிவித்தார்.